--- --:--:-- --

ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலின்போது ​​விடிய விடிய கண்காணித்த பிரதமர் மோடி..!

1.1

பரேஷன் சிந்தூர் நடவடிக்கை செயல்படுத்தப்பட்ட நேரத்தில் பிரதமர் நரேந்திர மோடி எங்கிருந்து கண்காணித்தார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் கடந்த வாரம் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவிய நிலையில், ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் இந்திய பாதுகாப்புப் படைகள் பதிலடி கொடுத்து வருகின்றன. இந்திய ராணுவம், விமானப் படை, கடற்படை ஆகியவை இணைந்து கூட்டாக நள்ளிரவில் இந்தத் தாக்குதலை நடத்தினர்.

 

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள முர்தி, கோட்லி, முஷாபர்பாத், பஹவல்பூர் உள்ளிட்ட இடங்களை குறிவைத்து இந்தத் துல்லிய தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஸ்-இ-முகம்மது உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகளின் தலைமையகங்கள் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

அதன்படி ஏவுகணை கொண்டு நடத்தப்பட்ட இந்த அதிரடி தாக்குதலில் 26 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகவும், 50க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் படுகாயம் அடைந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது. 9 இலக்குகளும் வெற்றிகரமாக தாக்கி அழிக்கப்பட்டதாக ராணுவ உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், பொது மக்கள் குடியிருப்பு மற்றும் ராணுவ நிலைகள் மீது தாக்குதல் நடத்தப்படவில்லை என இந்திய ராணுவம் விளக்கம் அளித்துள்ளது.

 

கடந்த பதினைந்து நாட்களாக திட்டமிடப்பட்ட நடவடிக்கையின் ஒரு பகுதியாக இராணுவம், விமானப்படை மற்றும் கடற்படை இணைந்து இந்த தாக்குதலை நடத்தியிருப்பதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. பிரதமரின் ஒப்புதலோடு, அவரின் முழு கண்காணிப்போடு ‘ஆபரேஷன் சிந்தூர்’ அரங்கேற்றப்பட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது.

 

பிரதமர் மோடி இரவு முழுவதும் முப்படைகளின் தாக்குதல் நடவடிக்கைகளை நேரடியாக கண்காணித்து வந்தார் என்றும் சொல்லப்படுகிறது. கடந்த வாரம் முழுவதும் முப்படை அதிகாரிகளுடன் தனிப்பட்ட சந்திப்புகளை நடத்திய பிரதமர் மோடி, நேற்று முழுவதும் பல கூட்டங்களை நடத்தினார். அதன்படி, முப்படைகளுக்கும் முழு சுதந்திரம் அளிக்கப்பட்டு ஏவுகணை கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Right Menu Icon