--- --:--:-- --

இன்று நடக்கவிருந்த டிராக்டர் பேரணி நாளைக்கு ஒத்தி வைப்பு..!

7

டெல்லியில் மோசமான வானிலை நிலவுவதால் இன்று நடக்கவிருந்த டிராக்டர் பேரணி நாளைக்கு ஒத்தி வைக்கப்படுவதாக விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் அறிவித்துள்ளனர். மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் பஞ்சாப், ஹரியானா, உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

 

இவர்களுடன் மத்திய அரசு நேற்று முன்தினம் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்ற விவசாயிகளின் முக்கிய கோரிக்கையை ஏற்க மத்திய அரசு அடுத்த கட்ட பேச்சுவார்த்தை வரும் 8-ஆம் தேதி நடைபெற உள்ளது.

 

டெல்லியில் போராட்டம் நடக்கும் குண்டலி மனை சல்வார் பகுதியில் இன்று டிராக்டர் பேரணி நடத்தப்போவதாக அறிவித்து இருந்தனர். இந்த நிலையில் இந்த போராட்டம் மோசமான வானிலை காரணமாக நாளைக்கு ஒத்தி வைக்கப்படுவதாக விவசாய சங்க பிரதிநிதிகள் அறிவித்துள்ளனர்.

 

இதுகுறித்து பேட்டியளித்துள்ள சுவராஜ் சங்க தலைவர் யோகேந்திர யாதவ் இதை தங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்த உள்ளதாகவும் குடியரசு தினத்தன்று டெல்லியை நோக்கி பிரமாண்டப் பேரணி அழைப்பு விடுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.

 

குடியரசு தினத்தன்று டெல்லியில் நடத்தப்படும் டிராக்டர் பேரணியில் பெண்களும் டிராக்டரை ஓட்டி வருவார்கள் என்றும் விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது. இந்த நிலையில் டெல்லி, ஹரியானாவில் பெய்துவரும் மழையால் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

 

நேற்று அதிகாலை முதலே மழை பெய்து வருவதால் விவசாயிகள் தற்காலிக கூடாரங்களுக்குள் மழை நீர் புகுந்தது. மழை தொடர்ந்து பெய்து வருவதாலும் கடுமையான குளிரும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Right Menu Icon