பிரபல நடிகை ஊர்மிளா சிவசேனா கட்சியில் நாளை இணைகிறார்..!
பிரபல நடிகை ஊர்மிளா மடோண்கர் சிவசேனா கட்சியில் நாளை இணைய உள்ளார். கடந்த ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியில் இணைந்து போட்டியிட்ட ஊர்மிளா பின்னர் அந்த கட்சியில் இருந்து விலகி உள்ளார்.
இந்நிலையில் சிவசேனாவில் இணையும் அவருக்கு அந்த கட்சி சட்ட மேலவை உறுப்பினர் வாய்ப்பை வழங்கியுள்ளது.ஆளுநர் ஒதுக்கீட்டில் ஊர்மிளா உள்ளிட்ட 12 பேரில் சட்டப் மேலவை உறுப்பினர்களாக நியமிக்க சிவசேனா கட்சி பரிந்துரைத்துள்ளது.
ஆனால் இதற்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியில் ரங்கீலா தமிழில் இந்தியா உள்ளிட்ட ஏராளமான படங்களில் ஊர்மிளா நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.






