தமிழகத்தில் 11 மணி நிலவரப்படி 26.29% வாக்குகள் பதிவு; திருப்பூரில் 27.25%
தமிழகத்தில் 11 மணி நிலவரப்படி 26.29 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன. திருப்பூரில் 27.25 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன.
தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காலை 9 மணி நிலவரப்படி 13.8% வாக்குகள் பதிவாகி இருந்தன. தற்போது 11 மணிக்கு அது அப்படியே இரட்டிப்பாகி இருக்கிறது.
காலை 11 மணி நிலவரப்பட்டி 26.29 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. அதிகபட்சமாக நாமக்கல்லில் 28.33 சதவீதம் வாக்குகள் பதிவாகின. சென்னையில் 23.67%, சேலம் – 23.56, திருவள்ளூர் – 26.47, தேனி – 26.35%, திருவண்ணாமலையில் 26.78, விழுப்புரத்தில் 27%, ஈரோட்டில் 27.42%, சேலத்தில் 25.52% வாக்குகள் பதிவாகி உள்ளன.
அதேபோல் மதுரையில் 26.33, விருது நகர் – 27.82, ராமநாதபுரம் – 26.20, தூத்துக்குடி – 25.80%, கன்னியாகுமர் – 25.28 என்றளவில் 11 மணி நிலவர வாக்குப்பதிவு உள்ளது.






