--- --:--:-- --

கொரோனா பாதிப்பால் உயிரிழந்த மத்திய அமைச்சர் சுரேஷ் அங்காடி.. அரசியல் கட்சி தலைவர்கள் அதிர்ச்சி!!

chcfg

கொரோனா தொற்று பாதிப்புக்கு ஆளாகி தீவிர சிகிச்சையில் இருந்த மத்திய ரயில்வே இணையமைச்சர் சுரேஷ் அங்காடி உயிரிழந்தார்.கொரோனா பாதிப்பால் உயிரிழந்த முதல் மத்திய அமைச்சர் சுரேஷ் அங்காடி என்ற நிலையில், அவருடைய மறைவு அரசியல் கட்சித் தலைவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

இந்தியாவில் கொரோனாவின் ஆட்டம் இன்னும் குறைந்தபாடில்லை. விஸ்வரூபமெடுத்துள்ள நிலையில், தினசரி பாதிப்பு கிட்டத்தட்ட ஒரு லட்சத்தை நெருங்கியும், உயிரியுப்பும் ஆயிரத்தை தாண்டியும் பதிவாகி வருகிறது. சில நாட்களாகவே உலக அளவில் தொற்று பாதிப்பு மற்றும் உயிரிழப்பில் இந்தியா தான் முதலிடத்தில் உள்ளது.

 

இந்த கொரோனா தொற்று பாதிப்பு அரசியல் விஐபிக்களையும் விட்டு வைக்கவில்லை. பாஜக மூத்த தலைவரும், உள்துறை அமைச்சருமான அமித் ஷா, நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி, பாஜக முதல்வர்கள் எடியூரப்பா, சிவராஜ் சிங் சவுகான் உட்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், எம்.பி., எம்.எல்.ஏ.க்களும் என கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதில் தமிழகத்தைச் சேர்ந்த காங்.எம்.பி., வசந்தகுமார், திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் மற்றும் முன்னாள் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் என சிலரும் கொரோனா தொற்றால் உயிரிழந் ததும் அதிர்ச்சியளிப்பதாக அமைந்துள்ளது.

 

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெலகாவி தொகுதி எம்.பியும், மத்திய ரயில்வே இணையமைச்சருமான சுரேஷ் அங்காடி, கடந்த 11-ந் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.கடந்த ஒரு வாரமாக உடல்நிலை மோசமடைந்து தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு உயிரிழந்தார்.

 

கொரோனா தொற்றால் உயிரிழக்கும் முதல் மத்திய அமைச்சர் சுரேஷ் அங்காடி ஆவார். 65 வயதான சுரேஷ் அங்காடி, இளம் வயது முதலே ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் தீவிரமாக பணியாற்றியவர் என்பதும், கர்நாடக பாஜக முக்கிய தலைவராக திகழ்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. சுரேஷ் அங்காடி மறைவு அதிர்ச்சி அளிப்பதாக பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Right Menu Icon