--- --:--:-- --

சாலை விபத்தில் உயிரிழந்த காவலர்.. முதல்வர் ஸ்டாலின் நிவாரண நிதி..!

7

யிலாடுதுறை அருகே சாலை விபத்தில் உயிரிழந்த காவலரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியிருக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் அவரது குடும்பத்திற்கு 25 லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.

 

நாகப்பட்டினம் வெளிபாளையம் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வரும் ராஜேஷ் என்பவர் பணிக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். சீர்காழி புறவழிச் சாலையில் நத்தம் அருகே சென்ற பொழுது சாலை தடுப்பில் எதிர்பாராத விதமாக அவரது வாகனம் மோதி விபத்தில் சிக்கியது.

 

இந்த விபத்தில் படுகாயம் அடைந்த காவலர் ராஜேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் அவருடன் பயணித்த அவரது சகோதரர் ராஜ்குமார் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

இந்த நிலையில் சாலை விபத்தில் உயிரிழந்த காவலர் ராஜேஷ் குடும்பத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்தவுடன் அவரது குடும்பத்தினருக்கு 25 லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கவும் உத்தரவிட்டார்.

 

Right Menu Icon