விஜயவாடா அருகே 3 கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகளை பறிமுதல் செய்த போலீசார்
ஆந்திர மாநிலம் விஜயவாடா அருகே தங்க நகைகளை கடத்தி வந்த 2 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து மூன்று கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகளை பறிமுதல் செய்தனர்.
விஜயவாடாவில் இருந்து தங்க நகைகள் கடத்தப்படுவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

இந்தநிலையில் சந்தேகத்திற்கிடமான வகையில் வந்த காரை மறித்து சோதனை செய்தபோது அதில் உரிய ஆவணங்களின்றி தங்க நகைகளை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக மும்பையைச் சேர்ந்த தேஸ், ஜெய்,விஜயவாடாவை சேர்ந்த ஸ்ரீநிவாஸ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து 3 கோடியே 18 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சுமார் ஒன்பது கிலோ நகைகளை கைப்பற்றினர். இச்சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.





