அவிநாசி, பூண்டி அனுப்பர்பாளையம் பகுதிகளில் கரோனோ தொற்றுநோயை தடுக்க போலீசார் தீவிர கண்காணிப்பு… லத்தியுடன் களமிறங்கிய பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர்
தற்போது உலகையே உலுக்கிக்கொண்டு இருக்கும் கரோனா நோய்தொற்றிலிருந்து அவரவர்களை தற்காத்துக்கொள்ள இந்தியா உள்பட 50-க்கும் மேற்பட்ட நாடுகள், பல நாட்களாக தங்கள் நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து அதனை நடைமுறைபடுத்தி வருகிறது. பொதுமக்கள் வீடுகளை விட்டு வரவேண்டாம். தேவை உள்ளவர்கள் மட்டும் வெளியே வரவேண்டும். அப்படியே வரநேர்ந்தாலும் பொதுஇடத்தில் ஒருவருக்கொருவர் குறைந்தது ஒரு மீட்டர் இடைவெளி விட்டு நிற்க அல்லது வரவேண்டும் என வலியுறுத்தி வருகின்றன.
மேலும் அனைத்து நாடுகளுக்கு இந்த கொரோனா நோயில் இருந்து தப்பிக்க அனைவரும் முகத்தில் மாஸ்க் அணிய வேண்டும். கைகளை அடிக்கடி கழுவிக்கொள்ளவேண்டும் என ஒருமித்த குரலில் கூறிவருகிறது. இதனைத்தொடர்ந்து தமிழகத்தில் கரோனா நோய்த்தொற்று பரவுவதை தடுக்க தமிழகஅரசு தொடர்ந்து மக்களிடம் கண்டிப்புடன் நடைமுறைப்படுத்தி வருகிறது. இதனால் தேவையில்லாமல் வெளியே வருபவர்களிடம் போலீசார் தடியால் அடித்தும், தோப்புக்கரணம் போன்ற நூதன தண்டனைகளை வழங்கியும் வருகிறார்கள்.

இன்று காலை ஞாயிற்றுக்கிழமை ஆனதால் பொதுவாக பொதுமக்கள் அனைவரும் வெளியே வந்து மட்டன் கோழி, மீன் மற்றும் காய்கறிகளை ஒருவாரத்திற்கு தகுந்தவாறு வாங்கி செல்வார்கள். அப்போது கூட்டமாகவோ அல்லது 2 க்கும் மேற்பட்டோ வருவதால் கொரோனா பாதிப்பு ஏற்படலாம் என்பதை கருதி போலீசார் சாலைகளை தடுப்புகளை ஏற்படுத்தி கண்காணித்து வருகிறார்கள்.
இந்தநிலையில் அவிநாசியில் இருந்து சேவூர் வரை உள்ள மெயின் ரோட்டில் ஏராளமான கடைகள் உள்ளதால் பொதுமக்கள் விதிகளை பின்பற்றாமல் இருப்பார்கள் என அவிநாசி போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரேமா தலைமையில் போலீசார் ஒரு ஜீப்பில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது ரோட்டில் இருந்த காய்கறி கடைகளில் மக்கள் விதிகளை பின்பற்றாமல் இருந்ததை கண்டித்து எச்சரித்தனர். அதேபோல் வரிசையில் இடைவெளி இல்லாமல் குடிநீர் குழாயில் தண்ணீர் பிடித்துக்கொண்டிருந்த பெண்களை அழைத்து எச்சரித்தனர்.
மேலும் வீடுகளுக்கு முன்பு நின்றுகொண்டிருந்தோர், பல் விலக்கி கொண்டிருந்தோர், 3 க்கும் மேற்பட்டோர் நின்றுகொண்டு பேசிக்கொண்டிருந்தோர், ஏ.டி.எம்மில் பணம் எடுக்க வந்தவர்கள், என எல்லோரையும் எச்சரித்து அனுப்பினார். சேவூர் சந்தைப்பேட்டையில் மாட்டுக்கறி வாங்க வந்த மக்கள் கடைக்கு முன்பு கூட்டமாக நின்று கொண்டு சத்தம்போட்டுக்கொண்டு இருந்தனர். அவர்களை போலீசார் லத்தியை சுழற்றி வரிசைபடுத்தி நிற்க வைத்து மட்டன் கடைக்காரரை சத்தம்போட்டு எச்சரித்து கடை நடத்த அனுமதித்தனர்.

அதேபோல் திருமுருகன்பூண்டி சிக்னல் மற்றும் திருமுருகநாதசுவாமி கோவில் முன்பு தடுப்புகளை ஏற்படுத்தி திருமுருகன்பூண்டி போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு இருந்தனர். அந்த ரோட்டில் தேவையில்லாமல் வாகனத்தில் வந்தவர்களை நிறுத்தியா போலீசார் அவர்களை கடுமையாக எச்சரித்து அனுப்பினர். திருப்பூர் மாநகராட்சி சார்பில் அனுப்பர்பாளையம் கோவை டிபார்ட்மென்ட் ஸ்டோர்ஸ் முன்பு லாரிகளில் கொண்டுவரப்பட்ட கிருமி நாசினியை ரோடுகளில் பீய்ச்சி அடித்து சுத்தப்படுத்தினர்.
போலீசாரின் இந்த தன்னலமற்ற சேவையை பாராட்டும் வகையில் குற்றம் குற்றமே புலனாய்வு வாரஇதழின் நிறுவனரும், செய்தி ஆசிரியருமான எம். கண்ணதாசன் வழிகாட்டுதலின்படி நிருபர்கள் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசாருக்கு கிருமி நாசினி வழங்கி கையை துடைக்க வைத்து வாழ்த்து தெரிவித்தனர்.







