--- --:--:-- --

மாணவர்களுடன் உரையாடும் பிரதமர்! தமிழகத்தில் இருந்து எத்தனை மாணவர்கள்?

8

பொதுத்தேர்வை அச்சமின்றி எதிர்கொள்ளும் வகையில் மாணவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு தமிழகத்திலிருந்து 66 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

 

மாணவர்கள் பொதுத் தேர்வுகளை பயமின்றி எதிர்கொள்ளும் வகையில் அவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடும் நிகழ்ச்சி ஜனவரி 16ம் தேதி நடைபெற உள்ளது. இதில் பங்கேற்கும் மாணவர்கள் இணைய வழியில் தங்களது கட்டுரைகளை டிசம்பர் 23-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

தமிழகத்திலிருந்து 66 மாணவர்கள் தேர்வு செய்யப்படும் நிலையில், மாவட்டத்திற்கு சிறந்த 5 மாணவர்களை தேர்வு செய்து மாநில அளவிலான போட்டிக்கு அனுப்புமாறு பள்ளிக் கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

Leave a Reply

Right Menu Icon