புதுச்சேரியிலும் பிளஸ் டூ பொதுத்தேர்வு ரத்து..!
தமிழ்நாட்டை தொடர்ந்து புதுச்சேரியிலும் பிளஸ் டூ பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக அந்த மாநில முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி மாநிலத்திற்கு என்று தனியாக கல்வி காரியம் எதுவும் கிடையாது என்பதால் புதுச்சேரி காரைக்கால் பிராந்தியத்திற்கு தமிழக கல்வி வாரியத்தின் நடைமுறைகள் மற்றும் பாடத்திட்டங்கள் பின்பற்றப்பட்டு வருகின்றன.
கொரொனா காரணமாக மாணவர்களின் நலன் கருதி தமிழ்நாட்டில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு அனுமதி ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில் புதுச்சேரியில் பிளஸ் டூ பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக அம்மாநில முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.






