பிபின் ராவத் உடல் பீரங்கி குண்டுகள் முழங்க நல்லடக்கம்..!
முப்படை தளபதி தளபதி பிபின் ராவத் உடல் அஞ்சலிக்கு பிறகு ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு டெல்லி கண்டோன்மென்ட்டில் அரசு மரியாதையுடன் பீரங்கி குண்டுகள் முழங்க தகனம் செய்யப்பட்டது.
குன்னூர் அருகே நடைபெற்ற ஹெலிகாப்டர் விபத்தில் உயிரழந்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உட்பட 13 பேரின் உடல்கள் விமானம் மூலம் டெல்லி கொண்டு செல்லப்பட்டனர். விமானப்படை தளத்தில் பிரதமர், மத்திய அமைச்சர்கள், முப்படைகளின் தளபதிகள் உட்பட 13 பேர் இந்தியர்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.
டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. மத்திய அமைச்சர் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். அதிகாரிகள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் முப்படை தளபதியின் உடல் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு பிபின் ராவத்திற்கு பிரியாவிடை கொடுத்தனர். பின்னர் டெல்லி கன்டோன்மென்ட்டில் பிபின் ராவத் மற்றும் அவரது மனைவியின் உடலும் ஒரே மேடையில் பீரங்கி குண்டுகள் முழங்க தகனம் செய்யப்பட்டது.
இறுதி சடங்கில் முதலமைச்சர்கள், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய அமைச்சர்கள் பல்வேறு நாடுகளின் தூதர்கள் மற்றும் ராணுவ அதிகாரிகள் கலந்து கொண்டனர்.






