--- --:--:-- --

முகநூல் பக்கத்தில் தொடர்ந்து பாஜகவை பற்றி அவதூறு பரப்பும் நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு !!!

7.5

கோவை தெற்கு மாவட்ட பாஜக தலைவராக இருக்கும் வசந்தராஜன் என்பவர் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு ஒன்றை அளித்தார்.அந்த மனுவில் கோவையை சேர்ந்த சிலம்பரசன் என்பவர் தன்னுடைய முகநூல் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

 

அந்த பதிவில் பாஜகவை சேர்ந்த ஆறுமுகம் என்பவர் மூதாட்டியின் வீட்டை ஏமாற்றி கையகப்படுத்தியுள்ளதாக பதிவிட்டுள்ளார்.

ஆனால் ஆறுமுகம் என்பவர் பாஜகவை சார்ந்தவர் இல்லை என்றும், பாஜகவில் இருப்பதால் தான் காவல்துறையால் கைது செய்யப்படவில்லை என பொய்யாக சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளதாகவும், பாஜகவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் உண்மைக்கு புறம்பான செய்திகளை பரப்பி வருவதாகவும், சிலம்பரசன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், லிங்கில் பதிவிட்டுள்ள பதிவை நீக்கம் செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தது.

Leave a Reply

Right Menu Icon