தமிழகத்தில் உள்ள அனைத்து தொண்டு நிறுவனங்கள் மீதான மனு தள்ளுபடி
தமிழகத்தில் உள்ள அனைத்து தொண்டு நிறுவனங்களையும் முறைப்படுத்த கோரி தொடரப்பட்ட வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தமிழகத்தில் உள்ள தொண்டு நிறுவனங்கள் தங்களுக்கு கிடைக்கும் நிதி குறித்து உரிய கணக்கு வைத்திருப்பது இல்லை என்றும், எனவே அவற்றில் முறைப்படுத்த உத்தரவிட வேண்டும் எனவும் தமிழகத்தை சேர்ந்த சுபாஷ் சந்திரன் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதி பானுமதி தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்த போது சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்பதை விட்டுவிட்டு எதற்காக நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்து இருக்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பிய நீதிபதி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.






