--- --:--:-- --

விபரீதமான ஊஞ்சல் விளையாட்டு.. சிறுவனின் கழுத்தை இறுக்கிய சேலை..!

6

திருவள்ளூர் அருகே வீட்டில் ஊஞ்சல் விளையாடிக் கொண்டிருந்த எட்டு வயது சிறுவனின் சேலை கழுத்து இறக்கியதில் மூச்சு திணறி உயிரிழந்தான். திருவள்ளூர் மாவட்டத்தில் பிவிஆர் நகரை சேர்ந்தவர் புருஷோத்தமன்.

 

இவரது மகன் நான்காம் வகுப்பு படிக்கும் சிறுவன் ஊஞ்சலில் சேலையை கழுத்தில் சுற்றி விளையாடிக் கொண்டிருந்த பொழுது மூச்சு திணறல் ஏற்பட்டு அவதியுற்றான்.

 

சிறுவனின் அலறலை கேட்ட பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஓடி வந்து சிறுவனை திருவள்ளுவர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

 

Right Menu Icon