--- --:--:-- --

பள்ளிவாசல் கட்டடத்திற்கு விழாவிற்கு சீர்வரிசை கொண்டு வந்த பிற மத மக்கள்..!

5

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் புதிய பள்ளிவாசல் கட்டிடத் திறப்பு விழாவிற்கு பிற மதத்தைச் சேர்ந்தவர்கள் சீர்வரிசை கொண்டு சென்றது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. ஹம்சா முகைதீன் ஜும்மா பள்ளிவாசல் புதிய கட்டிடத்திறப்பு விழா நடைபெற்றது.

 

இதற்கு சுற்றுவட்டாரத்தை சேர்ந்த இந்து மற்றும் கிறிஸ்துவ மக்கள் நல்லிணக்கத்தை போற்றும் வகையில் சீர்வரிசை கொண்டு சென்றனர். வேத ஸ்ரீ உச்சிலி மாகாளியம்மன் கோவிலில் இருந்து தாம்பூல தட்டுகளில் இனிப்பு வகைகள், பழங்கள், அரிசி, பருப்பு மற்றும் மளிகை சாமான்களுடன் பெண்கள் ஊர்வலமாக சீர்வரிசை எடுத்துச் சென்றது.

 

காண்போரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. சீர்வரிசையுடன் வந்தவர்களை பள்ளிவாசல் நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்து பொன்னாடை போர்த்தி சிறப்பு செய்தனர்.

 

Right Menu Icon