திடீரென வெடித்த பேருந்தின் டயர் அலறிய பயணிகள்..!
மானாமதுரை பேருந்து நிலையத்திலிருந்து சிவகங்கை சென்று கொண்டிருந்தத அரசு பேருந்து கீழதண்னை அருகே சென்ற பொழுது முன் பக்க டயர் திடீரென பலத்த சத்தத்துடன் வெடித்ததில் அதிர்ச்சியடைந்த பயணிகள் அச்சமடைந்து கூச்சல் இட்டனர்.
அப்பொழுது சாதுரியமாக செயல்பட்ட ஓட்டுனர் வாகனத்தை சாலையின் ஓரத்தில் லாவகமாக நிறுத்தி அதில் பயணித்த 35 பயணிகளை மாற்று பேருந்து மூலம் சிவகங்கை அனுப்பி வைத்தார்.





