தென்காசி சட்டமன்றத் தேர்தலில் பதிவான தபால் வாக்குகளை மீண்டும் எண்ண உத்தரவு..!
தென்காசி சட்டமன்றத் தொகுதியில் பதிவான தபால் வாக்குகளை மீண்டும் எண்ண வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தென்காசி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரின் வெற்றியை எதிர்த்து அதிமுக வேட்பாளர் செல்வமோகன் பாண்டியன் தொடர்ந்து வழக்கில் இந்த உத்தரவை உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
10 நாட்களில் தபால் வாக்குகளை எண்ணி முடிவை அறிவிக்க தென்காசி மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மனுதாரருக்கு செலவாக பத்தாயிரம் ரூபாய் வழங்கவும் தேர்தல் அதிகாரிக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.






