பொன்விழா எழுச்சி மாநாட்டுக்கு ஆயத்தமாகும் அதிமுக..!
அதிமுகவின் மதுரை மாநாட்டுக்கான ஏற்பாட்டு குழு அமைக்கப்பட்டுள்ளது. அதிமுகவின் பொன்விழா எழுச்சி மாநாட்டின் பணிகளை மேற்கொள்ள பல்வேறு குழுக்களை அமைத்து அந்த கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.
அதிமுக கட்சியின் யூக வரலாற்றில் பொன்விழா எழுச்சி மாநாடு மதுரையில் ஆகஸ்ட் 20ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவில் மாநாட்டுக்கான பணிகளை மேற்கொள்ள மாநாட்டு ஒருங்கிணைப்பு குழு தலைமையில் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
விழா மலர், உணவு பந்தல், விளம்பரம், நிகழ்ச்சி நிரல் ஆகியவற்றை கவனித்துக் கொள்ள பல்வேறு குழுக்களை அமைத்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார்.
மற்றொரு அறிக்கையில் கட்சியில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கைக்கான கால அவகாசம் ஜூலை 19ஆம் தேதி மாலை 5 மணி வரை நீட்டிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.






