மதுரை ரயில் நிலையத்தில் மீன் சிலையை மீண்டும் நிறுவ உத்தரவு..!
மதுரை ரயில் நிலையத்தில் மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப மீன் சிலையை நிறுவ வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
ஒரு வாரத்தில் மீன் சிலையை மாநகராட்சி வசம் ஒப்படைக்க தெற்கு ரயில்வேயின் மதுரை கோட்டை நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளது.
மதுரை ரயில் நிலையத்திலிருந்து அகற்றப்பட்ட மீன் சிலையை நீதிமன்ற உத்தரவின் படி மீண்டும் வைக்காத ரயில்வே நிர்வாகத்திற்கு எதிராக வழக்கு போடப்பட்டுள்ளது. மீன் சிலையை போக்குவரத்துக்கு இடையூறு இல்லாத இடத்தில் வைக்க மாநகராட்சிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





