அமெரிக்காவில் முகக்கவசம், தடுப்பூசி கட்டாயமாக்கப்படுவதற்கு எதிர்ப்பு..!
WASHINGTON, DC - JANUARY 23: Demonstrators gather at the Lincoln Memorial for an anti-COVID vaccine and mandate rally in Washington, DC on January 23, 2022. (Photo by Craig Hudson for The Washington Post)
முக கவசம் மற்றும் தடுப்பூசிகளை கட்டாயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் ஆயிரக்கணக்கானோர் பேரணி நடத்தினர். வாஷிங்டன் நினைவிடம் முதல் லிங்கன் நினைவிடம் வரை முழக்கம் எழுப்பியபடி பேரணி நடைபெற்றது.
முக கவசம் அணிவது குறித்து அமெரிக்காவில் இருவேறு கருத்துகள் நிலவுகின்றன. அதிபர் ஜோ பைடன் அங்கம் வகிக்கும் ஜனநாயக கட்சி முகக்கவசம் அணிய வேண்டும் என வலியுறுத்துகிறது. அதேநேரம் குடியரசு கட்சி முன்னிலையில் இருக்கும் பல மாகாணங்களில் முககவசம் கட்டாயமாக்கப்படவில்லை.
அதேநேரம் ஜனநாயக கட்சி ஆட்சியில் இருக்கும் கலிபோர்னியா போன்ற மாகாணங்களில் உள்ள முக கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் முக கவசம் அணிவதோ, தடுப்பூசி செலுத்திக் கொள்வதோ தனிநபரின் விருப்பமாக இருக்க வேண்டும் எனவும் கட்டாயமாக்கப்பட கூடாது எனவும் வலியுறுத்தி மக்கள் பேரணி நடத்தினர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




