--- --:--:-- --

ஆபரேஷன் கஞ்சா 2.O – அதிரடியில் இறங்கிய காவல்துறை

1

பரேஷன் கஞ்சா 2.o என்ற திட்டத்தின் கீழ் இரண்டு நாட்களில் 150 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளது. குற்றச் சம்பவங்களில் அதிகம் ஈடுபடுவதன் எதிரொலியாக போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் குற்றத் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

 

அதன் தொடர்ச்சியாக ஆபரேஷன் கஞ்சா 2. o திட்டத்தை கையில் எடுத்திருக்கிறது காவல்துறை. அதில் பள்ளி, கல்லூரிகளுக்கு அருகே கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் விற்பனையை ஒழிப்பது, கஞ்சா விற்பனையில் ஈடுபடுவோரை சிறையில் அடைப்பது, தொடர் குற்றச் செயல் புரிவோர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்வது உள்ளிட்ட பல நடவடிக்கைகள் இந்த திட்டத்தில் செயல்படுத்தப்படும்.

 

இந்த சூழலில் கடந்த 27ம் தேதி ரேஷன் திட்டத்தை தொடங்கி வைத்த டிஜிபி சைலேந்திரபாபு 27ஆம் தேதி நடத்த உத்தரவிட்டுள்ளார். அதன்படி கடந்த 28, 29ம் தேதிகளில் தமிழ்நாடு முழுவதும் அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன .

 

அதில் கஞ்சா விற்பனை தொடர்பாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 350 பேர் கைதாகி உள்ளதாகவும் 150 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Right Menu Icon