--- --:--:-- --

மீண்டும் ஒரு உயிரை காவு வாங்கிய ஆன்லைன் ரம்மி..!

6

கையில் பணத்தை இழந்த விரக்தியில் 37 வயதான நபர் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. சென்னை அடுத்த மாணவி அறிஞர் அண்ணா தெருவை சேர்ந்தவர், 37 வயதான இவர் பெயிண்டிங் வேலை செய்து வந்தார்.

 

இவரின் மனைவி வரலட்சுமி. இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளன. வேலை நேரம் போக மற்ற நேரங்களில் ஆன்லைன் ரம்மி விளையாடுவதை வழக்கமாக வைத்துள்ளார். விளையாடுவதை வழக்கமாக வைத்துள்ளார். கடந்த 6 மாதங்களுக்கு மேலாக ஆன்லைனில் ரம்மி விளையாடி வந்த பெருமாள் அதில் பணத்தை இழந்துள்ளார்.

 

இருந்தபோதிலும் விட்டதை பிடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் மீண்டும் மீண்டும் ஆன்லைனில் அதிக ஆர்வம் காட்டி வந்துள்ளார். எந்நேரமும் ஆன்லைன் ரம்மி விளையாடிய அவருக்கு கடன் வாங்கி விளையாடும் அளவுக்கு அதன் மீதான மோகம் அதிகரித்தது.

 

இதற்காக தெரிந்தவர்களிடம் எல்லாம் கடன் வாங்கி அதையும் விளையாட்டிலேயே கொடுத்துள்ளார். இப்படியாக 20லட்சம் ரூபாய் பணத்தை ஆன்லைனில் கோட்டை விட்டுள்ளார். கணவன் மனைவிக்கிடையே பிரச்சினை வந்துள்ளது. மன உளைச்சலுடன் தூங்க சென்ற பெருமாள் காலையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

 

Right Menu Icon