துபாயில் இருந்து திருச்சிக்கு கடத்தி வரப்பட்ட ஒரு கோடி மதிப்பிலான தங்கம்..!
துபாயில் இருந்து திருச்சிக்கு கடத்தி வரப்பட்ட ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான கடத்தல் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். துபாயிலிருந்து சிறப்பு விமானத்தில் இருந்த பயணிகளில் சுங்கத்துறை அதிகாரிகள் கண்காணித்து வந்துள்ளனர்.
அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் வந்த சென்னையைச் சேர்ந்த ஆரவ் பாஷா மற்றும் புதுக்கோட்டையைச் சேர்ந்த சிவா ஆகியோரை அவர்கள் சோதனையிட்டனர்.
2 பேரும் உள்ளாடைகளுக்குள் தங்கத்தை மறைத்து எடுத்த வந்தது தெரிய வந்தது. ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான 2 கோடி 680 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.






