பொங்கல் திருநாளில் சிஏஏ, என்.ஆர்.சி-க்கு கோலம் போட்டு எதிர்ப்பு தெரிவித்த மக்கள்
குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி பொங்கல் திருநாளான நேற்றும், இன்றும் பொதுமக்கள் தங்கள் வீடுகளின் முன்பு கோலங்கள் இட்டு எதிர்ப்பை பதிவு செய்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு குடியுரிமையின் சட்டத்திருத்தம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக கோலங்களை இட்டு எதிர்ப்பை பதிவு செய்தவர்கள் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
இதனால் தமிழக அரசின் காலத்திலும் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள என் ஆர் சி, சிஏஏ ஆகியவற்றுக்கெல்லாம் எதிராக திருவான்மியூர் பகுதியில் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் கோலங்களை விட்டு எதிர்ப்பை தெரிவித்தனர்.






