2 டோஸ் தடுப்பூசி போட்டவருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி..!
டெல்லியில் 2 டோஸ் தடுப்பூசியை குத்திக் கொண்டவருக்கு ஓமைக்ரான் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் சர்வதேச விமான நிலையங்களை மூட உத்தரவிடுமாறு மத்திய அரசுக்கு டெல்லி அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது. டெல்லியில் ஒருவருக்கு ஓமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அவருக்கு இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டவர் என்பது தெரியவந்துள்ளது.
37 வயதான நபர் கிழக்கு ஆப்பிரிக்க நாடான சிரியாவிலிருந்து சென்று அங்கிருந்து டிசம்பர் இரண்டாம் தேதி இந்தியா திரும்பியவர் என்பது தெரியவந்தது. மேலும் இவர் தென் ஆப்பிரிக்காவில் ஒரு நகரில் ஒரு வாரம் தங்கி இருந்ததும் விசாரணையில் தெரியவந்தது.
இந்நிலையில் கொரொனா பரவலை கட்டுப்படுத்த சர்வதேச விமான நிலையத்தை மூட வலியுறுத்தி டெல்லி அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது. மேலும் டெல்லி மக்கள் அனைவரும் பொது இடங்களில் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றுமாறு மாநில சுகாதாரத்துறை அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.






