--- --:--:-- --

ஓமனில் 6 இந்தியர்கள் உயிரிழப்பு – பள்ளம் தோண்டும்போது விபரீதம்

death

ஓமன் நாட்டில், குழாய் பதிக்க தோண்டிய பள்ளத்தில் புதைந்து 6 இந்திய தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

 

ஓமன் நாட்டின் தலைநகர் மஸ்கட்டில் சீப் என்ற இடத்தில் குழாய் பதிக்க பள்ளம் தோண்டும் பணி நடைபெற்று வந்தது. இஙு, 14 அடி ஆழ பள்ளம் தோண்டும் பணியில் இந்திய கட்டுமான தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.

 

அப்போது பெய்த பலத்த மழையால், மேலே குவிக்கப்பட்ட மண், பள்ளத்துக்குள் சரிந்தது. உள்ளே வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள் மீது மண் விழுந்து அமுக்கியது. இதில், இந்திய தொழிலாளர்கள் உயிருடன் புதைந்தனர். 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 12 மணி நேர போராட்டத்துக்கு பிறகு அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டன.

 

எனினும், இறந்த இந்திய தொழிலாளர்கள், எந்த பகுதியை சேர்ந்தவர்கள் என்ற விவரம் தெரியவில்லை. இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள தகவலில், சம்பவம் குறித்த முழு விவரங்களை அறிய ஓமன் அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

Leave a Reply

Right Menu Icon