வெள்ளிப் பொருட்கள் மற்றும் ஒரு லட்சம் பணத்துடன் பையை தவறவிட்ட மூதாட்டி..!
பேருந்தில் சீப்பிடிக்க கைகுட்டை துண்டு போடுவது இயல்பான ஒன்று. ஆனால் சத்தியமங்கலத்தில் மூதாட்டி ஒருவர் செய்த காரியம் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. கேரள மாநிலத்தைச் சேர்ந்த மங்கலம்மா என்று 65 வயது மூதாட்டி திருப்பூர் செல்வதற்காக சத்தியமங்கலத்தில் இருந்து அரசு பேருந்தில் ஏறியுள்ளார்.
பேருந்தில் இடம் பிடிப்பதற்காக தான் கொண்டு வந்திருந்த மஞ்சள் பையை வைத்துவிட்டு தேனீர் அருந்த சென்றுள்ளார். மீண்டும் வந்து பார்த்தபொழுது பேருந்து புறப்பட்டு சென்று விட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். விஷயம் என்னவென்றால் அந்த மஞ்சள் பையில் மூதாட்டி மங்கலம்மாள் ஒரு லட்சம் ரூபாயை வைத்திருந்தார்.
உடனடியாக காவல்துறையினரை அணுகியுள்ளார். அவர்கள் புளியம்பட்டி காவல்துறையினருக்கு தகவல் அளித்து பேருந்து நிலையத்தில் எதிர்நோக்கி காத்திருந்தனர். பாட்டியின் மஞ்சள் பையையும் மீட்டுள்ளனர். இதில் ஆச்சரியம் என்னவென்றால் மூதாட்டி தவற விட்ட பையில் ஒரு லட்சம் ரூபாயும் வெள்ளி பொருட்களும் அப்படியே இருந்தன.





