--- --:--:-- --

இனி புத்தகத்தை பார்த்து தேர்வு எழுதலாம்.. சிபிஎஸ்சி தேர்வு முறையில் மாற்றம்..!

7

9 முதல் 12ம் வகுப்பு வரை உள்ள சிபிஎஸ்சி பள்ளி மாணவர்களுக்கு தேர்வுமுறையில் மாற்றம் கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 9 முதல் 12 ஆம் வகுப்பு தேர்வுகளை புத்தகங்களை பார்த்து மாணவர்கள் எழுத பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

 

மனப்பாடம் செய்து அப்படியே எழுதும் நடைமுறைக்கு மாற்றாக சிந்தித்து விடை எழுதும் புதிய நடைமுறையை அறிமுகப்படுத்த இந்த திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. சோதனை முறையை தொடர்ந்து நாடு முழுவதும் புதிய தேர்வு நடைமுறை அறிமுகப்படுத்த சிபிஎஸ்சி திட்டம் செய்துள்ளது.

 

ஒரு மாணவரின் நினைவாற்றலை பரிசோதிப்பதற்கு பதிலாக பாடத்தை எந்த அளவுக்கு புரிந்துள்ளார் என்பதை புதிய முறை மூலம் மதிப்பீடு செய்யவும் சிபிஎஸ்சி முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

 

தேர்வின் பொழுது புத்தகங்கள் கையேடுகளை மாணவர்கள் எடுத்து செல்ல அனுமதி அளிக்கும் வகையில் புதிய பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. புத்தகங்களை பார்த்து எழுத அனுமதிப்பதன் மூலம் மாணவர்களின் சிந்தனை திறன் அதிகரிக்கும் என சிபிஎஸ்சி நம்பிக்கை தெரிவித்துள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon