--- --:--:-- --

எனக்கு ஒன்றும் ஆகாது..தைரியமாக இருங்கள் – சந்திரபாபு நாயுடு

16

ந்திர முன்னாள் முதலமைச்சரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடுவுக்கும் வார்த்தை போர் முற்றிய நிலையில், கைது நடவடிக்கையை கையில் எடுத்துள்ளார் ஜெகன் மோகன்.

 

சந்திரபாபு நாயுடுவின் கைது ஆந்திர அரசியல் களத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்று காலை ஊழல் குற்றச்சாட்டில் சந்திரபாபு நாயுடுவை ஆந்திர மாநில சிஐடி போலீசார் கைது செய்தனர்.

 

அங்கிருந்து சுமார் 9 மணி நேரம் சாலை மார்க்கமாக சந்திரபாபு நாயுடு விஜயவாடாவில் உள்ள ஊழல் குற்றச்சாட்டு தொடர்பான விஷயங்களை விசாரிக்கும் சிறப்பு விசாரணை அலுவலகத்திற்கு அழைத்து செல்லப்பட்டார்.

 

தொடர்ந்து அலுவலகத்தில் உள்ள ஆறாவது தளத்தில் சிறப்பு விசாரணை குழு அதிகாரிகள் சந்திரபாபு நாயுடுவிடம் விடிய விடிய விசாரணை மேற்கொண்டதாக தெரியவந்துள்ளது.

 

இந்த நிலையில் இன்று அதிகாலை 4 மணிக்கு அவரை விஜயவாடாவில் உள்ள அரசு பொது மருத்துவமனைக்கு மருத்துவப் பரிசோதனைக்காக சிஐடி அதிகாரிகள் அழைத்து சென்றனர்.

 

அங்கு அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த நிலையில் நேற்று இரவு சந்திரபாபு நாயுடுவை அவருடைய மனைவி புவனேஸ்வரி,மகன் லோகேஷ் ஆகியோர் சந்தித்து பேச அனுமதி அளிக்கப்பட்டது. அவர்களிடம் எனக்கு ஒன்றும் ஆகாது. தைரியமாக இருங்கள் என்று சந்திரபாபு கூறியதாக தெரியவந்துள்ளது.

Right Menu Icon