குப்பைகளை சேகரிக்க இனி கட்டணம்!
வீடுகள், திருமண மண்டபங்களில் உள்ளிட்ட இடங்களில் குப்பை சேமிப்பதற்கு கட்டணம் வசூலிக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்து அரசிடம் அனுமதி கூறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னை மாநகராட்சியில் இருந்து 5 ஆயிரத்து 249 டன் குப்பைகள் நாளொன்றுக்கு சேகரிக்கப்படுகிறது.
இந்த நிலையில் வீடுகளில் குப்பை சேகரிக்கும் பணிக்காக மாதத்திற்கு குறைந்தபட்சம் 10 ரூபாய் முதல் அதிகபட்சமாக 100 ரூபாய் வரை கட்டணம் நிர்ணயிக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இதேபோல் திருமண மண்டபம் சமுதாய நலக் கூடங்களில் ஆயிரம் ரூபாய் முதல் 7 ஆயிரத்து 500 ரூபாய் வரையும், உணவகங்களுக்கு 300 ரூபாயிலிருந்து 5 ஆயிரம் ரூபாய் வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் 300 ரூபாய் முதல் 3,000 ரூபாய் வரையிலும், வணிக உரிமை கடைகளில் 200 ரூபாய் முதல் ஆயிரம் ரூபாய் வரையிலும் வசூலிக்கப்பட உள்ளது. இதேபோல் திறந்தவெளியில் நடத்தப்படும் நிகழ்ச்சியின் அடிப்படையில் 5 ஆயிரம் ரூபாய் முதல் 20 ஆயிரம் ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.






