ஆஸ்திரேலியா அருகே நித்திக்கு வங்கி கணக்கு..!
நித்யானந்தா வனுவாட்டு தீவு நாட்டு வங்கியில் கணக்கு வைத்துள்ளது தெரியவந்துள்ளது. சிறப்பு பூஜை செய்வதற்கு கட்டணம் செலுத்துமாறு நித்தியானந்தா தரப்பில் ஒருவருக்கு அனுப்பப்பட்ட மின்னஞ்சலில் வனுவாட்டு தேசிய வங்கியின் தகவல் குறிப்பிடப்பட்டிருந்தன.
அதன்மூலம் வனுவாட்டு தலைநகரில் உள்ள வங்கிக் கிளையில் கணக்கு வைத்து உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் இருந்து ஆயிரத்து 750 கிலோ மீட்டர் தொலைவில் பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள தீவு வருமான வரி உள்ளிட்ட எந்த வழிகளும் இல்லாத நாடுகளில் வனுவாட்டு ஒன்று.
அங்கு உள்ள வங்கியில் கணக்கு தொடரும் நபர்களின் தகவல்களும் பத்திரமாகப் பாதுகாக்கப்படும். இதனால் நித்யானந்தா அங்குள்ள வங்கியில் கணக்கு வைத்துள்ளதாக கூறப்படுகிறது.






