மாநில நிதி அமைச்சர்களுடன் நிர்மலா சீதாராமன் இன்று ஆலோசனை..!
பட்ஜெட் குறித்த ஆலோசனைக்காக அனைத்து மாநில நிதி அமைச்சர்களை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று சந்திக்கிறார். தமிழக நிதி அமைச்சர் அடுத்த ஆண்டு தாக்கல் செய்யப்படவுள்ள மத்திய பட்ஜெட் தொடர்பான ஆலோசனைகளை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த திங்களன்று தொடங்கினார்.
தொழிலதிபர்களை சந்தித்து உள்கட்டமைப்பு மற்றும் பருவநிலை மாற்றம் உள்ளிட்ட அம்சங்கள் பற்றி ஆலோசனை நடத்தினார். செவ்வாய் என்று வேளாண்மை நிதித்துறை சார்ந்த பிரதிநிதிகள் நடத்திய ஆய்வில் நிர்மலாவுடன் நிதித்துறை இணை அமைச்சர்கள் மூத்த அதிகாரிகள் பங்கேற்றனர்.
வியாழன் அன்று ஏற்றுமதியில் மற்றும் இறக்குமதி உள்ளிட்ட தொழிலதிபர்களுடன் ஆலோசனை நடத்தினார். சுகாதாரம், கல்வி மற்றும் நீர் வளம் துறைகளின் பற்றிய ஆலோசனைகளையும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதில் தொடர்ச்சியாக இன்று அனைத்து மாநில நிதி அமைச்சர்களுடன் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆலோசனை நடத்துகிறார். இதில் தமிழகநிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பங்கேற்க உள்ளார்.






