--- --:--:-- --

நிர்பயா வழக்கு: தூக்கு தண்டனை உறுதி…! உச்சநீதிமன்றம் அதிரடி

3

டெல்லியில் கடந்த 2012-ம் ஆண்டு ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு தூக்கி வீசப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் கைதான 6 பேரில் ஒரு சிறுவன் தண்டனை காலம் முடிந்து விடுதலையானான்.

 

மற்ற ஐந்து பேரில் ஒருவர் உயிரிழந்து விட நால்வருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இவர்கள் நால்வரும் வருகிற ஒன்றாம் தேதி சனிக்கிழமை காலை 6 மணிக்கு தூக்கிலிடப்பட உள்ளனர். இந்த நிலையில் 4 குற்றவாளிகளில் முகேஷ் சிங் என்பவர் தனது கருணை மனு நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

 

இதனை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி பானுமதி தலைமையிலான அமர்வு இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. குடியரசு தலைவர் மற்றும் மத்திய உள்துறை அமைச்சகம் ஆகியவை கருணை மனுவை நிராகரித்து இருப்பதாக கூறி இருக்கும் காரணங்கள் அனைத்தும் திருப்தி அளிப்பதாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

 

இதன்மூலம் முகேஷிற்கு தூக்கு தண்டனை விவகாரத்தில் சட்ட வாய்ப்புகள் அனைத்தும் முடிந்து விட்டதால் அவன் ஒன்றாம் தேதி தூக்கிலிடப்பட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அதேசமயம் மற்றொரு குற்றவாளியான அக்ஷய் சிங் என்பவர் தூக்கு தண்டனையிலிருந்து நிவாரணம் கோரி இன்று சீராய்வு மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

 

ஏற்கனவே தூக்கு தண்டனையை சீராய்வு செய்யக் கோரி அக்ஷய் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Right Menu Icon