புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அனுமதி..!
புதுச்சேரியில் சுற்றுலாத்துறை வளர்வதற்காக புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்த அவர் விடுதிகளில் கேளிக்கை நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு மட்டும் அனுமதி இல்லை எனக் கூறினார்.






