டி.ஜி.பி அலுவலகத்திற்கு வருபவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்
டி.ஜி.பி அலுவலகத்திற்கு வருபவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. டி.ஜி.பி அலுவலகத்திற்கு வருபவர்கள் தங்கள் விவரங்கள் தெளிவாக தெரியும்படி அடையாள அட்டை அணிய வேண்டும். பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்ட பகுதிகளில் மட்டுமே செல்ல வேண்டும்.
அனுமதி இல்லாமல் புகைப்படம், வீட்ஓ அல்லது ஒலிப்பதிவு செய்யக்கூடாது. ஆயுதங்கள், வெடிபொருட்கள் மற்றும் தடை செய்யப்பட்ட எந்த பொருட்களும் கொண்டுவர அனுமதி இல்லை.






