--- --:--:-- --

பட்டியலின குடும்பங்களுக்கு 10 லட்சம் ரூபாய் வழங்க புதிய திட்டம்..!

5

தெலுங்கானா மாநில முதலமைச்சர் சந்திரசேகரராவ் அறிவித்த பட்டியலின குடும்பங்களுக்கு 10 லட்சம் ரூபாய் வழங்க புதிய திட்டம் பட்டியல் இன மக்களை ஏமாற்றுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி உள்ளனர்.

 

அந்த திட்டத்தின் கீழ் தலித் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்பது அந்தத் திட்டத்தின் முக்கிய அம்சம். இதற்காக ஆயிரத்து 200 கோடி ரூபாய் மாநில அரசு சார்பில் ஒதுக்கப்பட்டது. ஆனால் விரைவில் இந்த திட்டம் மாற்றியமைக்கப்பட்டது.

 

அதன்படி மாநிலம் முழுவதும் உள்ள பட்டியலின மக்கள் என்பதை சுருக்கி ஹூஸ்ராபாத் தொகுதியில் மட்டும் பட்டியலின பந்து திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது.

 

ஹைதராபாத் தொகுதிக்கு மட்டும் திடீரென கருணை காட்டுவதற்கு அந்த தொகுதியில் இடைத்தேர்தல் நடக்க இருப்பது தான் காரணம் என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ள நிலையில் தேர்தலுக்குப் பின்பு இந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என கூறி போராட்ட மிரட்டல் விடுத்து நீதிமன்றங்களை அணுக முடிவெடுத்து விட்டனர்.

 

இதையடுத்து தற்போது அந்த திட்டத்தை முதல்வர் சந்திரசேகரராவ் நிறுத்தி வைக்க முடிவு எடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Right Menu Icon