--- --:--:-- --

நாட்டிலேயே முதலிடம் பிடித்து தமிழகம் சாதனை…! எதுல தெரியுமா? நொந்து போவீங்க!!

refh

புதிய மோட்டார் வாகனச் சட்டம் அமலானது முதல், நாட்டிலேயே அதிக அபராதம் விதித்ததில் தமிழகம் முதலிடம் பிடித்து பெரும் சாதனை படைத்துள்ளது.

 

மத்திய அரசு கொண்டு வந்த புதிய மோட்டார் வாகனச் சட்டம் கடந்த செப்டம்பர் 1-ந் தேதி முதல் நாடு முழுவதும் அமலுக்கு வந்தது. சாலை விதிகளை மீறுவோருக்கு கடுமையான அபராதம் விதிப்பது, சிறைத்தண்டனை போன்று பல்வேறு கடும் தண்டனைகள் விதிக்கும் இந்த புதிய சட்டம் வாகன ஓட்டிகளுக்கு வயிற்றில் புளியைக் கரைத்து விட்டது என்றே கூறலாம்.

 

ஏனெனில், அபராதத் தொகை பல மடங்கு உயர்த்தப்பட்டதும் ஒரு காரணம். இரு சக்கர வாகனம் ஓட்டுப் போது ஹெல்மெட் அணியாவிட்டாலோ, கார் ஓட்டும்போது சீட் பெல்ட் அணியாவிட்டாலோ முன்பு இருந்த அபராதமான ரூ 100-ல் இருந்து ரூ 1000 ஆக உயர்த்தப்பட்டது. குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால் ரூ 10 ஆயிரம், அதிவேகமாக ஓட்டினால் ரூ 5 ஆயிரம் என்பதுடன், லைசென்ஸ் இல்லாமலோ, இன்சூரன்ஸ், ஆர்சி இல்லாமலோ ஓட்டினால் கூட பல மடங்கு அபராதம் விதிக்கப்படும் எனஅறிவிக்கப்பட்டது. சிறுவர்களை வாகனம் ஓட்ட அனுமதிக்கும் பெற்றோருக்கு சிறைத் தண்டனை என்று கூட அறிவிக்கப்பட்டது.

அது மட்டுமின்றி அபராதம் வசூலிப்பதிலும் டிஜிட்டல் முறை அறிமுகம் செய்யப்பட்டது. ஸ்பாட்டிலேயே அபராதம் விதித்து சலானை கிழித்து சம்பந்தப்பட்டவர்களிடம் கொடுத்து விடுவார்கள். பின்னர் கோர்ட்டில் போய் ஆஜராகி அபராதம் செலுத்த வேண்டும் என பல்வேறு அதிரடிகள் இந்த புதிய மோட்டார் வாகனச் சட்டத்தில் கொண்டு வரப்பட்ட்ன.

 

அபராதம் அதிக மடங்கு எனக் கூறி இந்த புதிய சட்டத்தை உடனே அமல்படுத்த சில மாநிலங்கள் தயங்கின. சில மாநிலங்களின் அரசோ, அபராதத் தொகையை குறைத்து அறிவித்தன. ஆனால் தமிழகமோ, மத்திய அரசின் இந்த புதிய மோட்டார் வாகனச் சட்டத்தை அப்படியே அமல்படுத்தியது. இதனால் குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்களும், ஹெல்மெட் போடாமலோ, போதிய ஆவணங்கள் இன்றியோ வாகனம் ஓட்டியவர்கள், போக்குவரத்து போலீசாரிடம் வசமாகச் சிக்க ஆரம்பித்தனர். தமிழக அரசுக்கும் அபராதத் தொகையாக பல மடங்கு கிடைத்தது.

 

இதனால் புதிய மோட்டார் வாகனச் சட்டம் அமலுக்கு வந்த இந்த இரண்டரை மாத காலத்தில், நாட்டிலேயே அதிக அபராதம் விதித்த மாநிலங்களின் பட்டியலில் முதலிடம் பிடித்து தமிழகம் சாதனை படைத்துள்ளது.

 

இது தொடர்பாக மக்களவையில் ஜெகதாம்பிகாபால் என்ற பாஜக எம்.பி., புதிய மோட்டார் வாகனச் சட்டத்தின்படி விதிக்கப்பட்ட அபராதம் குறித்து எழுப்பியிருந்த கேள்விக்கு, மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்காரி, புள்ளி விபரங்களுடன் எடுத்துப் பூர்வமாக பதிலளித்துள்ளார். அதில் தமிழகத்தில் அதிகபட்சமாக 14 லட்சத்து 13 ஆயிரத்து 996 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டு, இந்திய அளவில் முதலிடம் பிடித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே பெரிய மாநிலமான உ.பி.யில் 9,83, 226 பேரிடமும், தலைநகர் டெல்லியில் 4,81,321 பேருக்கு அபராதம் விதித்து சலான் வழங்கப்பட்டு, அடுத்த இரு இடங்களில் இந்த மாநிலங்கள் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. ஆனால் எவ்வளவு அபராதத் தொகை வசூலிக்கப்பட்டது என்பது மட்டும் அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ள பதிலில் கூறப்படவில்லை.

Leave a Reply

Right Menu Icon