--- --:--:-- --

இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவு தேர்வு..!

1

ருத்துவ படிப்புக்கான நீட் நுழைத் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது. எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நாடு முழுவதும் நீட் நுழைவுத் தேர்வு அடிப்படையில் நடத்தப்படுகிறது.

 

அந்த வகையில், 2025-2026ஆம் கல்வியாண்டின் மருத்துவ படிப்பு மாணவ சேர்க்கைக்கான நீட் தேர்வு மே 4ஆம் தேதி நடைபெறுகிறது.இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு கடந்த மாதம் 7ஆம் தேதி தொடங்கிய நிலையில், இன்று இரவு 11.50 மணிக்கு நிறைவடைகிறது.

 

விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ள வரும் 9, 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் வாய்ப்பு வழங்கப்படும்.தேர்வு மையங்கள் குறித்த விவரங்கள் ஏப்ரல் 26ஆம் தேதியும், ஹால்டிக்கெட் மே 1ஆம் தேதியும் வெளியிடப்படுகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon