நீட் வழக்கு – திமுக கையெழுத்து இயக்கம் நாளை தொடக்கம்..!.
நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விளக்கு கோரி திமுக சார்பில் மாபெரும் கையெழுத்து இயக்கம் இன்று தொடங்குகிறது. மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வு கட்டாயம் என்று மத்திய அரசு நடைமுறைப்படுத்தியது முதலே தமிழ்நாடு அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
நீட் தேர்வில் இருந்து விளக்களிக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நீட் தேர்வுக்கு எதிராக திமுக இளைஞரணி மாணவரணி மருத்துவர் அணி சார்பில் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வந்தது.
இதனிடையே நீட் தேர்வு விளக்கு கோரி திமுக சார்பில் இன்று மாபெரும் கையெழுத்து இயக்கம் தொடங்க உள்ளது. சென்னை கலைவாணர் சங்கத்தின் நடைபெறும் நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இதனை தொடங்கி வைக்க உள்ளார்.
தமிழ்நாடு முழுவதும் மாணவர்கள் பெற்றோர்களிடம் 50 நாட்களில் 50 லட்சம் கையெழுத்து பெற்று அவற்றை குடியரசு தலைவருக்கு அனுப்பி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





