--- --:--:-- --

நயினார் நாகேந்திரன் டெல்லி பயணம்.. உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் இன்று சந்திப்பு!

1

டெல்லி சென்றுள்ள தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திப்பார் என தகவல் வெளியாகியுள்ளது. டெல்லியில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை, தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சந்தித்து பேசினார். அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில், கூட்டணியில் இடம்பெறும் கட்சிகள் குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் எடப்பாடி பழனிசாமிக்கு வழங்கப்படுவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது.

 

அதைத்தொடர்ந்து எடப்பாடி பழனிசாமியை சென்னையில் உள்ள அவரது இல்லத்தில், நயினார் நாகேந்திரன் சந்தித்தார். இந்நிலையில், நயினார் நாகேந்திரன் சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் சென்றார். முன்னதாக நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த அவர், டெல்லியில் நடைபெறவுள்ள பெரும்பிடுகு முத்தரையருக்குத் தபால் தலை வெளியிடும் நிகழ்ச்சியில் பங்கேற்க செல்வதாகக் கூறினார்.

தொடர்ந்து, டெல்லியில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை நயினார் நாகேந்திரன் சந்தித்தார். இந்த சந்திப்பு குறித்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், தனது யாத்திரையின் போது பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்களை நிதியமைச்சரிடம் வழங்கியதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, நயினார் நாகேந்திரன் சந்திக்க இருப்பதாக கூறப்படுகிறது.

Right Menu Icon