நீரில் மூழ்கி மாயமான இளைஞர்..!
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே அமைந்துள்ள நீர் தேக்கத்தில் சென்னையை சேர்ந்த சுற்றுலா பயணி தவறி விழுந்து மாயமானார்.
அவரைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. பூண்டி கிராமத்தில் அமைந்துள்ள இந்த நீர் தேக்கத்தை காண ஏராளமான சுற்றுலா வாசிகள் வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.






