அட்ரஸ் கேட்பது போல் திசை திருப்பி பணத்தை சுருட்டிய மர்ம நபர்கள்..!
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பஜார் பகுதியில் அஞ்சல் துறை ஊழியரின் கவனத்தை திசை திருப்பி ஸ்கூட்டி டிக்கியில் வைக்கப்பட்டிருந்த இரண்டு லட்சம் ரூபாயை திருடி சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
ஜெயபாலன் என்பவர் ஸ்கூட்டியின் சாவியை எடுக்காமல் மருந்து கடைக்கு சென்றபோது மர்ம நபர் ஒருவர் முகவரி கேட்டு அவரை திசை திருப்பிய நிலையில் மற்றொருவர் பணத்தை திருடும் சிசிடிவி காட்சிகளை கொண்டு கைவரிசை காட்டியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.





