--- --:--:-- --

ஏடிஎம் கார்டு சிக்கியதால் கோவத்தில் உடைத்த மர்ம நபர்கள்..!

7

துரவாயிலில் ஏடிஎம் இயந்திரத்தில் ஏடிஎம் கார்டு போடும் இடம் மட்டும் உடைக்கப்பட்டுள்ளது போலீசாரை குழப்பம் அடையச் செய்துள்ளது. மதுரவாயில் அடுத்த மேட்டுக்குப்பம் சாலையில் தனியாருக்கு சொந்தமான ஏடிஎம் மையம் அமைக்கப்பட்டுள்ளது.

 

இந்நிலையில் இரவு நேரத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் ஏடிஎம்மிற்குள் சென்றனர். அப்பொழுது ஏடிஎம் எந்திரத்தில் ஏடிஎம் கார்டு போடும் இடம் மட்டும் உடைக்கப்பட்டதால் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

 

முழுமையாக இயந்திரம் உடைக்கப்படவில்லை எனவும் கார்டு போடும் இடம் மட்டும் உடைக்கப்பட்டது போலீசாரை குழப்பம் அடைய செய்துள்ளது. இதன் காரணமாக கார்டு இயந்திரத்தில் சிக்கிக் கொண்டதால் அதை மட்டும் உடைத்து மர்ம நபர் திருடி சென்றாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon