--- --:--:-- --

திருச்சியில் திடீரென ஏற்பட்ட மர்ம சத்தம்..! காரணம் என்ன ?

8

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே பொய்கை மலை வனப் பகுதியை சுற்றியுள்ள கிராமங்களில் மர்ம சத்தத்தால் பொது மக்கள் பீதி அடைந்துள்ளனர்.

 

ஊரணி, பொய்கைபட்டி, பாளையத்தான் பட்டி, வடுகப்பட்டி, செம்பட்டி, பண்ணா உள்ளிட்ட கிராமங்களில் இந்த சப்தம் நேற்று பிற்பகலில் கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் வீடுகளை விட்டு வெளிவந்த மக்கள் சாலைகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

 

பல வீடுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளதால் மக்கள் அதிர்ச்சிக்கு உள்ளாகினர். இதுகுறித்து போலீசார் மற்றும் வருவாய்த் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Right Menu Icon