--- --:--:-- --

களத்தில் எம்.எஸ்.எம். ஆனந்தன் வேகம்… அதிமுக நிர்வாகிகள் உற்சாகம்!

Tiruppur North

முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தன், திருப்பூர் வடக்கு எம்.எல்.ஏ. விஜயகுமார் உள்ளிட்டோர், தேர்தல் வியூகம் தொடர்பாக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

திருப்பூர்: திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதியில் தேர்தல் களம் தற்போதே அனல் பறக்கத் தொடங்கியுள்ளது. அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.எஸ்.எம். ஆனந்தன், தொகுதியின் ஒவ்வொரு பகுதியிலும் நிர்வாகிகளை நேரில் சந்தித்து தேர்தல் வியூகங்களை வகுத்து வருகிறார்.


நிர்வாகிகளுடன் அதிரடி சந்திப்பு

 

அதன்படி, திருப்பூர் புதிய பேருந்து நிலைய பகுதிக்கு உட்பட்ட 19-வது வட்ட அதிமுக நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளை எம்.எஸ்.எம். ஆனந்தன் நேரில் சந்தித்தார். இந்த நிகழ்வின் போது, தேர்தல் பணிகளை எவ்வாறு முன்னெடுப்பது மற்றும் வாக்காளர்களை அணுகும் முறைகள் குறித்து விரிவான ஆலோசனைகள் வழங்கப்பட்டன. இதில் திருப்பூர் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் கே.என். விஜயகுமார் உடன் இருந்து நிர்வாகிகளை உற்சாகப்படுத்தினார்.

 

Tiruppur North
கே.என். விஜயகுமார் எம்.எல்.ஏ முன்னிலையில், கொங்கு நகர் பகுதிக்கு உட்பட்ட 30-வது வட்டத்திலும் முக்கிய ஆலோசனை நடத்திய எம்.எஸ்.எம். ஆனந்தன்.


கொங்கு நகரில் தேர்தல் வியூகம்

 

தொடர்ந்து, திருப்பூர் கொங்கு நகர் பகுதிக்கு உட்பட்ட 30-வது வட்டத்திலும் முக்கிய ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கே.என். விஜயகுமார் எம்.எல்.ஏ முன்னிலையில் நடைபெற்ற இந்த சந்திப்பில், அதிமுக பகுதி செயலாளர்கள் மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர். கூட்டணி கட்சிகளின் ஒருங்கிணைப்பு மற்றும் களப்பணிகளை வேகப்படுத்துவது குறித்து இங்கு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

 

எழுச்சியை ஏற்படுத்தும் சந்திப்புகள்!

 

இந்த இரு நிகழ்வுகளிலும் அதிமுக மாவட்ட, வட்ட அளவிலான நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்று தங்கள் ஆதரவை உறுதிப்படுத்தினர். முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தன் தொகுதி முழுவதும் மேற்கொண்டு வரும் இந்தத் தொடர் சந்திப்புகள், தொண்டர்கள் மத்தியில் பெரும் எழுச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு, தேர்தல் களத்தில் அதிமுக கூட்டணியின் பலத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளது.

Leave a Reply

Right Menu Icon