ராகுலுடன் நடை பயணம் மேற்கொண்ட எம்.பி மயக்கமடைந்து உயிரிழப்பு..!
ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடை பயணத்தில் பங்கேற்ற காங்கிரஸ் எம்.பி சந்தோஷ் சிங் சவுத்ரி மயங்கி விழுந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைப்பயணம் நடந்தது.
இதன் 76 வயதான காங்கிரஸ் எம்.பி ந்தோஷ் சிங் சவுத்ரி பங்கேற்றார். திடீரென மயங்கிய நிலையில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.



