மண்சரிவு ஏற்பட்டதால் பாதி வழியில் நிற்கும் மலை ரயில்..!
ஊட்டி மலை ரயில் பாதையில் மண்சரிவு ஏற்பட்டதால் வழியில் ரயில் நிறுத்தப்பட்டுள்ளது. தற்போது சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. நேற்று இரவு மற்றும் அதிகாலை பெய்த மழை காரணமாக மண்சரிவு ஏற்பட்டது.
இதனால் மலை ரயில் பாதி வழியில் சிக்கிக் கொண்டு உள்ளது. இதனை அப்புறப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.







