--- --:--:-- --

சொத்து மகளுக்கு கிடைக்காமல் போய்விடுமோ என்ற அச்சத்தில் சம்மந்தியை கூலிப்படை ஏவி கொன்ற தாய்..!

10

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே மகளுக்கு சொத்து கிடைப்பதற்காக சம்பந்தியை கூலிப்படை ஏவி கொலை செய்ததாக பெண் உள்ளிட்ட ஐந்து பேரை போலீசார் கைது செய்துள்ளனர். ஆயுள் பட்டியைச் சேர்ந்த பெண் அரசு ஊழியரான போது கணவரும் மகனும் இறந்துவிட்டனர்.

 

மருமகள் கிருத்திகா பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டதால் போதுமணி தனியாக வசித்து வந்துள்ளார். பக்கத்து வீட்டுக்காரர்கள் போதுமணியை பராமரித்து வந்துள்ளனர். எனவே தன்னை பராமரித்து வரும் பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு தமது இரண்டு ஏக்கர் நிலத்தை எழுதி வைக்க போதுமணி முடிவு செய்ததாக கூறப்படுகிறது.

 

இதனை அறிந்த மருமகள் கிருத்திகாவின் தாயார் துளசி மகளுக்கு சேர வேண்டிய சொத்து கிடைக்காமல் போய்விடுமோ என்று அஞ்சியுள்ளார். இதனையடுத்து கூலிப்படையை ஏவி சம்மந்தியை கொலை செய்ததாக கூறப்படுகிறது. சடலத்தை மீட்டு விசாரணை மேற்கொண்ட போலீசார் துளசி அவரது கணவர் ஜெயராமன் உட்பட ஐந்து பேரை கைது செய்தனர்.

 

Right Menu Icon