சேலையை எடுக்க மகனை 10ஆவது மாடியில் இருந்து தொங்கவிட்ட தாய்..!
ஹரியானா மாநிலத்தில் பத்தாவது மாடியில் பால்கனியில் ஒரு தாய் தனது மகனை அந்தரத்தில் தொங்க விட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரியானா மாநிலம் பரீதாபாத்தில் ஒன்பதாவது மாடியில் உள்ள பூட்டிய வீட்டின் பால்கனியில் சிக்கிய தனது சேலையை எடுத்த பெண் ஒருவர் தனது மகனை பத்தாவது மாடி பால்கனியில் இருந்து பெட்ஸீட்டால் அந்தரத்தில் தொங்கவிட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்தின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அதில் அந்தப் பெண்ணின் மகன் அந்தரத்தில் தொங்கியபடி உள்ளார். ஒன்பதாவது மாடியில் பூட்டிய வீட்டின் பால்கனியில் இருந்த தனது புடவையை எடுக்க தாய் ஒருவர் தனது மகனை ஒன்பதாவது மாடியில் இறக்கி பின்னர் அவரும் மற்றும் குடும்ப உறுப்பினர்களும் பெட்ஸீட்டை பிடிக்க சிறுவன் அதனை பிடித்து ஏறும் காட்சி வீடியோவில் இடம் பிடித்துள்ளன.
இதனை எதிர் கட்டிடத்தில் வசிக்கும் ஒருவர் படம்பிடித்துள்ளார். இதுபற்றி அந்த பெண்ணின் பக்கத்து வீட்டுக்காரர் போர்வையில் பூட்டிய வீட்டில் இருந்து தனது சேலையை எவ்வாறு திரும்ப எடுப்பது என்பது குறித்தும் அந்த பெண் யாருடைய உதவியும் ஆலோசனையும் கேட்காமல் தன்னிச்சையாக முடிவெடுத்து தனது மகனின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்த முடிவு செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.






