--- --:--:-- --

சிறுவனுக்கு பேய் பிடித்திருப்பதாக கூறி தாயே அடித்துக் கொலை..!

2

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே 7 வயது சிறுவனுக்கு பேய் பிடித்திருப்பதாக கூறி தாய் உட்பட 3 பெண்கள் சிறுவனை அடித்தே கொன்ற நிகழ்வு அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள கண்ணமங்கலம் பேரூராட்சி வளாகத்தில் ஒரு சிறுவனை மூன்று பெண்கள் அடித்து துன்புறுத்துவதாக போலிஸாருக்கு கிடைத்த தகவலின் படி அங்கு செல்வதற்குள் சிறுவன் உயிரிழந்ததாக தெரிகிறது.

 

இதைத்தொடர்ந்து சிறுவனின் உடலை கைப்பற்றிய போலீசார் உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

பின்னர் அந்த மூன்று பெண்களை கைது செய்து நடத்திய முதற்கட்ட விசாரணையில் வேலூர் மாவட்டம் கே வி குப்பம் கிராமத்தைச் சேர்ந்த இந்த மூன்று பெண்களும் சகோதரிகள் என்பதும் அதில் திலகவதி என்பவரது மகனுக்கு பேய் பிடித்ததாகவும் , அதனை ஓட்ட திருவண்ணாமலை வந்ததாக தெரிகிறது.

 

தொடர்ந்து நடத்திய விசாரணையில் ஆட்டோவில் சென்று கொண்டிருந்த நாங்கள் பாதியிலேயே இறக்கிவிட்ட பட்டதால் பேரூராட்சி வளாகத்தில் தங்கியதாகவும் திடீரென சிறுவனுக்கு வலிப்பு வந்து இறந்து விட்டதாகவும் திலகவதி கூறியதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon